MGR The King of Charity
யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர். குடியிருந்த நேரத்தில், காலையில், முருகன் டாக்கீஸ் உரிமையாளர் பரமசிவ முதலியாருடன் வாக்கிங் போவது வழக்கம். அப்படி செல்லும் வழியில் ஒரு பாட்டியம்மாள் புட்டு சுட்டு வியாபாரம் செய்வார். தூரத்திலிருந்து வரும்போதே வாசம் மூக்கைத் துளைக்கும். ஒரு நாள் அந்த அம்மாளிடம் புட்டு வாங்குவதற்காக சென்ற எம்.ஜி.ஆர், அவர் விலையை கூறியவுடன் "மறுநாள் வாங்கி கொள்வதாக" கூறி நகர்ந்திருக்கிறார்.
"ஏன் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்ட பாட்டியிடம், "தனக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றும் அந்தளவுக்கு தன்னிடம் காசு இல்லை" என்றும் பதில் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். ""பரவாயில்லே! நாளைக்கு வரும்போது காசு குடு'' என்று புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்த பாட்டியிடம், "நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்ன ஏமாத்திட்டா என்ன பண்ணுவே'' என்று கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
"காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது, வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல சேர்ந்துடும்'' என்று பாட்டியின் பதில் எம்.ஜி.ஆர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சொன்னபடி மறுநாள் காசைக் கொடுத்துவிட்டார். பாட்டியம்மாவும் சில நாட்கள் கழித்து இடம் மாறி சென்றுவிட்டார்.
பல வருடங்கள் கழித்து, தான் முதலமைச்சர் ஆன பின் அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவர் வீடு தேடிச் சென்று பொருளுதவியும் செய்திருக்கிறார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete